Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 நவம்பர் 01 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம். கீத்
தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்குப் படகில் கடத்த முயன்ற 2,000 கிலோகிராம் மஞ்சள் அடங்கிய 75 மூடைகளை, நடுக்கடலில் வைத்து இந்தியா - க்யூ பிரிவு பொலிஸார், இன்று (01) பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட மஞ்சளின் இலங்கை மதிப்பு 65 இலட்சம் ரூபாய் என க்யூ பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
மண்டபம் வடக்கு, மீன்பிடித் துறைமுகம் அருகே உரிய பதிவு இலக்கம் இல்லாத நாட்டுப்படகு ஒன்று நங்கூரமிடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட கியூ பிரிவு பொலிஸார், படகில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது, படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக மஞ்சாள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமையும் அந்நாட்டுப்படகு, தங்கச்சிமடத்தைச் சேர்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.
இந்தப் நாட்டுப்படகு, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்குச் செல்வதற்காக மண்டபம் வந்ததாகவும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கு மீனவர்களைக் கடலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள், நாட்டுக்குள் நுழைய முடியாததால், கடத்தி வந்த மஞ்சளை நாட்டுப்படகுடன் விட்டுச் சென்றுள்ளனர் என க்யூ பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
இதனுடன் தொடர்புடையவர்களைத் தேடி வருவதாகவும் அப்பகுதி மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் இந்தியா - க்யூ பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
40 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
4 hours ago
4 hours ago