எப். முபாரக் / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பகுதியில் மூன்று கடைகள் உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை, இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ,கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க நேற்று (3) உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவத்தில் கந்தளாய், வட்டுக்கச்சி மற்றும் வாத்தியாகம பகுதியைச் சேர்ந்த 20, 21 மற்றும் 19 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கந்தளாய் மற்றும் பேராறு பிரதேசங்களில் கடைகளை உடைத்து, பெருமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தன. அந்த கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களை பொலிஸார் கந்தளாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .