2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கட்டாகாலிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொன்ஆனந்தம்

திருகோணமலை நகரில், பராமரிப்பின்றி கட்டாக்காலிகளாக நடமாடும் கால்நடை உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நகரசபை தீர்மானித்துள்ளதாக நகரசபைச்செயலாளர் எஸ்.ஜெயவிஷ்ணு அறிவித்துள்ளார்.

நகரின் பல முக்கிய இடங்களில், இவ்வாறு நடமாடும் கட்டாக்காலி மாடுகளால், பொதுமக்கள் பயணங்களில் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக முறைப்படுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், கால்நடை உரிமையாளர்கள், தமது கால்நடைகளை உரிய முறையில் வளர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தவறும் பட்சத்தில், குறித்த கால்நடை  நகர சபை தொழிலாளிகள் மூலம் பிடிக்கப்பட்டால், அதற்கான தண்டப்பணம் செலுத்தியே கால்நடைகளை பெறவேண்டிய நிலமை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 எனவே, இவ்வாறான சிரமத்தைத் தவிர்க்க, தங்களது கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்குமாறு, நகரசபையின் செயலாளர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .