Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்,ஏ.எம்.ஏ.பரீத்
கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இம்முறை 50 ஆயிரத்து 400 ஏக்கரில் பெரும்போகச் செய்கை பண்ணப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
கந்தளாய், கிண்ணியா, வான்எல, தம்பலகமம் மற்றும் ஜயந்திபுரப் பகுதிகளில் கந்தளாய்க் குளத்து நீரைப் பயன்படுத்தி பெரும்போகச் செய்கை பண்ணப்படவுள்ளது. தற்போது இக்குளத்தில் போதுமானளவு நீர் உள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி கந்தளாய்க் குளத்திலிருந்து நீர் திறந்துவிடப்படவுள்ளதாகவும் இந்நிலையில் உழுதல், வரம்பு கட்டுதல் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட விவசாய நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.
நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம்வரை பெரும்போகச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago