2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கம்பிகள் திருடிய எண்மருக்கு விளக்கமறியலில்

எப். முபாரக்   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், முற்கம்பிகள் 150 கிலோகிராமைத் திருடிய எட்டுப் பேரை, இம்மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.

மூதூர் பகுதியைச் சேர்ந்த எட்டுப் பேரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், சம்பூர் பகுதியில் அனல்மின் நிலையம் அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட முற்கம்பிகளையே திருடியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபர்களைக் கைது செய்த பொலிஸார், மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X