2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கருவாடுகளைத் திருடியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

மீன் சந்தையில் 50 கிலோகிராம் மீன் கருவாட்டுப் பொதிகளைத்  திருடிய சந்தேகநபரை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ, நேற்று வியாழக்கிழமை (04) உத்தரவிட்டார்.

திருகோணமலை, சுமேதகமப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.         

பொதி செய்யப்பட்டு விற்பனைக்காக வேறு பிரதேசத்துக்கு அனுப்புவதற்கு வைக்கப்பட்டிருந்த கருவாடுகளைத் திருடியுள்ளதாக உரிமையாளரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை, கடந்த செவ்வாய்க்கிழமை (02) இரவு, கைதுசெய்ததாக திருகோணமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பதோடு, பல்வேறு திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .