2025 மே 14, புதன்கிழமை

கலந்துரையாடல்

பைஷல் இஸ்மாயில்   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சாரம் போன்ற திணைக்களங்களினூடக 2016/2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 367 அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், இன்று (19) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் தலைமையில் இடம்பெற்றது.

இதில், சகல திணைக்களங்களின் தலைவர்களும் கலந்துகொண்டு தங்களின் திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்பட்டத் திட்ட வரைபுகளை முன்வைத்தனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 04 பிராந்தியங்களிலும் குறித்தொதுக்கப்பட்ட  நிதியிலிருந்து 91 வேலைகளின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும், சுகாதார சேவைகள் செயற்றிட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 189 வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 09 வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், சமூக சேவைகள் திணைக்களத்தால் 19 வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஊடாக 06 வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், சுதேச திணைக்களத்தின் ஊடாக 16 வேலைத்திட்டங்களும், கிராமிய மின்சார திணைக்களம் ஊடாக 37 வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அதன் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அதில் உள்ள குறைபாடுகளைகள் பற்றியும் ஆரயப்பட்டன.

மேலும், மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதன்போது, சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் கருத்துத் தெரிவிக்கையில்,

 

“எதிர்வரும் ஆண்டுகளில் அதிகமான நிதிகளை ஒதுக்குவதற்கானத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்காக சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். சில வேலைத்திட்டங்களை இன்னும் அதிகமான முறையில் மிகச் சிறப்பான வேலைத்திட்டமாக மேற்கொள்வதற்கும் இன்னும் பல பிரதேசங்களில் சுகாதார சேவைகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் உள்ளதாலும், அடுத்த வருடம் அதிகமான நிதியை ஒதுக்க முயற்சித்து அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்றார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து நிதிகளும், 04 பிராந்தியங்களுக்கும் சமமாக ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளில் எவ்வித குறைபாடுகளும் இன்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தும், அதில் சிறு பிழைகளாவது எமது சுகாதார அபிவிருத்தியில் இருந்தால், அதனை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு, அமைச்சர் பணிப்புரை வழங்கிவைத்தார்.

இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாகாணப் பணிப்பாளர், சுதேச திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X