2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

கந்தளாய் வலயக் கல்வி வலயத்தின் கீழுள்ள ரஜஅல வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களின் பெற்றோர், பாடசாலைக்கு முன்பாக, நேற்றுப் புதன்கிழமை (05) கவனயீர்ப்புப் போராட்டம் ஈடுபட்டனர்.

பாடசாலையில், ஆங்கிலம், உடற்கல்வி மற்றும் இரண்டாம் மொழி தமிழ் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதை கண்டித்தும், புதிய ஆசிரியர்களை நியமித்துத் தரக் கோரியுமே பெற்றோர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது பாட ஆசிரியர்களை வேறு பாடசாலைகளுக்கு இணைப்புச் செய்யாதீர்கள்,ஆசிரியர்களை நியமித்துத் தாருங்கள் இல்லாவிடில் பாடசாலையை இழுத்து மூடுங்கள் என்ற சுலோகங்களை ஏந்தி இருந்தனர்.

பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், இது தொடர்பாக கந்தளாய் வலயக் கல்விப் பணிப்பாளரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X