ஒலுமுதீன் கியாஸ் / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய், அக்போபுர காட்டுப் பிரதேசத்துக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 25000 ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சந்தேக நபரை, அக்போபுர பொலிஸார் கைது செய்து, நேற்று (27) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, பதில் நீதவான் ஷாலிகா இந்த தீர்ப்பினை வழங்கினார்.
மேலும்,எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி, குறித்த நபரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .