2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

காணாமல் போன வயோதிபர் சடலமாக மீட்பு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-பூம்புகார் வீதி, அம்பியார் ஒழுங்கை பகுதியில், கடந்த நான்கு நாள்களுக்க முன்னர் காணாமல் போன 70 வயது நபர், இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று, உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியைச் சேர்ந்த பெருமாள் சோலைமுத்து என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயிருந்த நிலையில் அவரது மகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து, காட்டு பகுதிகளில் தேடி பார்த்தபோதே, அவர் சடலமாகக் கிடந்தது கண்டறியப்பட்டதாக தெரியவருகிறது.

சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. எஸ். எம். ரூமி சென்று பார்வையிட்டதுடன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார். 

பிரேதப் பரிசோதனைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .