2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காணிப் பிரச்சினையில் அடிதடி; மூவர் வைத்தியசாலையில்

Editorial   / 2017 செப்டெம்பர் 30 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், பொன்ஆனந்தம்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் வயல் காணிகளை துப்பரவு செய்யச் சென்ற மூன்று பேர் மீது இன்று (30)  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளான அந்த மூவரும், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிவெட்டி-பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் சிவகுமார் (34 வயது) மூதூர்- லேக் வீதியைச்சேர்ந்த ஏ.டபிள்யூ.எம்.ஜிஹாத் (51 வயது) மற்றும் மூதூர்- ஆணைச்சேனையைச்சேர்ந்த எம்.ஜ.றிசாத் (38 வயது) ஆகியோரே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கங்குவேலி பகுதியில் உள்ள, தங்களுடைய  விவசாய காணிகளை செய்கை செய்ய, மூதூர் பிரதேசத்திலிருந்து  இன்று சனிக்கிழமை காலை சென்றுள்ளன​ர்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவின்படி இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

எனினும், அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தங்களை, சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களே தாக்கினர் என்று பாதிக்கப்பட்டவர்கள், பொலிஸில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இத்தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக  மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .