Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன்ஆனந்தம்
“அரச உத்தியோகத்தர்கள் காணி தொடர்பான சட்ட அறிவை பெற்றிருந்தல் அவசியமானதாகும். அவ்வாறு பெற்றிருப்பின் மக்கள் மத்தியில் இருந்து வரும் இது தொடர்பான பிணக்குகளை தீர்க்க உதவியாக இருக்கும்” என, ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர்வே. ஜெகதீஸன் தெரிவித்தார்.
மேற்படி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராமசேவை அதிகாரிகள் உள்ளிட்ட முன்னணி அதிகாரிகளுக்கான காணி தொடர்பான அடிப்படைச்சட்ட அறிவு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
40 அடிமட்ட அதிகாரிகள் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்காலத்தில் காணி தொடர்பான பிணக்குகள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் கிராமத்தில் முரண்பாடுகளும் ஏற்படுகின்றன. இவற்றை குறைக்கும் வகையில், அரச அதிகாரிகளின் காணி தொடர்பான சட்ட அறிவை வழங்கும் வகையில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
“எமது உத்தியோகத்தர்கள் இது தொடர்பான அடிப்படை சட்ட அறிவை பெற்றிருத்தல் அவசியமாகும். இதன் மூலம் ஏற்படும் பிணக்குகளை ஒரளவு குறைக்க வாய்யேற்படும். ஆகவே, அடிமட்டத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் இச்செலமர்வை நன்கு பயன்படுத்தி கிராமத்தில் எழும் காணிப்பிணக்குகளை குறைக்க மக்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்” என்றார்.
இதன்போது அகத்தின் மாவட்ட இணைப்பாளர் த.திலீப்குமார், மாவட்ட பெண்கள் வலயமைப்பின் மாவட்ட இணைப்பாளர் பூ.கலைவாணி,திட்ட இணைப்பாளர் சி.அனித்த மற்றும் பிரதேச செயலக காணி அபிவிருத்தி அதிகாரி த.லோஜினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
3 hours ago