2025 மே 14, புதன்கிழமை

காணி தொடர்பான மத்தியஸ்த சபை

தீஷான் அஹமட்   / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்துக்கான  விசேட மத்தியஸ்த சபையை (காணி) செயற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், திருகோணமலை  மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர்   தலைமையில் நாளை  (26) இடம்பெறவுள்ளது.

திருகோணமலை மாவட்டத்துக்கான விசேட மத்தியஸ்த சபைக்கான (காணி)  மத்தியஸ்தர்களுக்கான நியமனம், நீதியமைச்சால், 2016.07.22 ஆம் திகதி வழங்கப்பட்டு, நீண்ட காலம் செயற்படுத்தப்படாமல் இருந்தமை   குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மத்திய சபையைச் செயற்படுத்தல் தொடர்பான இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், காணி ஆணையாளர்கள்,  கிராம சேவையாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச  காணி உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மத்தியசபையை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் செயற்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X