அப்துல்சலாம் யாசீம் / 2018 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, இலுப்பைக்குளம் வயல் பகுதியில் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து வயோதிபரொருவர் நேற்று(10) மாலை உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் நிலாவெளி,இலுப்பைக்குளம், 08ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த வடிவேல் யோகராசா (வயது 56) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வழமை போன்று வீட்டிலிருந்து காலை நேரத்தில் மாடுகளை மேய்ப்பதற்காக சென்றவர், மாலையாகியும் வீடு திரும்பாமையினால், அவரைத் தேடிசென்ற மனைவி வயலிலிருந்த கிணற்றடியில், அவரது பாதணியும்,குடிப்பதற்கு கொண்டு செல்கின்ற தண்ணீர் போத்தலையும் அவதானித்ததுடன், கிணற்றில் கிடந்த தனது கணவரின் சடலத்தினையும் அவதானித்து அயலவர்களை அழைத்து சடலத்தினை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago