Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியாவின் கல்வி அபிவிருத்திக்கு, நீண்ட காலத் திட்டங்களை செயற்படுத்தக்கூடியவாறு ஆகக் குறைந்தது ஆறு வருடங்களுக்காவது, நிரந்தரமாகக் கடமையாற்றக்கூடிய வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்று, பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
“கிண்ணியா கல்வி வலயம் உருவாக்கப்பட்ட எட்டு வருடங்களில், பத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பணியாற்றியிருக்கின்றமை, கிண்ணியாவின் கல்விநிலை மேம்பாட்டுக்கும் ஓர் அறிவுச் சமூகத்தின் இருப்புக்கும், பலவீனமான அடையாளம்” என்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
“2009.02.01 ஆம் திகதி கிண்ணியாவுக்கான கல்வி வலயம் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
“அன்றிலிருந்து இன்றுவரை, கிண்ணியா கல்வி வலயம், கல்வி வளர்ச்சியில் இலங்கையிலேயே கடைசி வலயமாகவே இருந்து வருகின்றது.
“இவ்வாறானதொரு நிலையில், 9ஆவது வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எம்.அஹமட் லெப்பையும், நாளை (2) முதல் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
“இந்நிலையில், கிண்ணியா கல்வி வலயத்தின் பத்தாவது பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ள முனவ்வரா நளீம் மாத்திரமே, கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவராக உள்ளார்.
“எனவே, கிண்ணியாவின் கல்வி அபிவிருத்திக்கு, நிரந்தரமாக வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்” என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
2 hours ago