2025 மே 14, புதன்கிழமை

கிண்ணியா வைத்தியசாலை A தரமாகியது

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்

நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த தனிநபர் பிரேரணையை அடுத்து, தரமுயர்த்துதலில் புறக்கணிக்கப்பட்டிருந்த கிண்ணியா வைத்தியசாலையையும் தரமுயர்த்தும் வைத்தியசாலைகளுக்குள் உள்வாங்குவதாக, சுகாதார அமைச்சு தனக்கு அறிவித்துள்ளதாக, இம்ரான் மஹரூப் எம்.பி தெரிவித்தார்.  

தெகியத்தகண்டிய, சம்மாந்துறை, சாய்ந்தமருது, மூதூர், கிண்ணியா வைத்தியசாலைகளை தரமுயர்த்துமாறு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாண சபை, மத்திய அரசாங்கத்திடம், பரிந்துரை செய்திருந்தது. 

இருந்தபோதும், 2 வாரங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இரகசியக் கலந்துரையாடலொன்றில், கிண்ணியா வைத்தியசாலையைத் தவிர ஏனைய வைத்தியசாலைகளைத் தரமுயர்த்தத் தீர்மானிக்கப்பட்டது.  

இதன்பின் தரவுகளின் படி, ஏனைய வைத்தியசாலைகளை விட அதிக தரத்தைக் கொண்ட கிண்ணியா வைத்தியசாலை தரமுயர்த்தலில் புறக்கணிக்கப்பட்டது. இதில் உள்ள அரசியல் உள்நோக்கங்கள் உள்ளனவா என, இம்ரான் மஹரூப் உட்பட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுகாதாரப் பிரதியமைச்சரிடம் கேள்வியெழுப்பினர்.  

இதைத் தொடர்ந்தே, கிண்ணியா வைத்தியசாலையையும் தரமுயர்த்த தாம் தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சில் இருந்து, இம்ரான் மஹரூபிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X