Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஒலுமுதீன் கியாஸ் / 2019 மார்ச் 06 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக பிரதேச மக்கள் சந்திப்புகளில் கலந்துகொள்வதற்காக, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிண்ணியாவுக்கு சனிக்கிழமை (09) விஜயம் செய்யவுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதின் வேண்டுகோளுக்கினங்க கிண்ணியா செல்லும் ஆளுநர், அன்றையதினம் பிற்பகல் 02 மணிக்கு கிண்ணியா தள வைத்தியசாலையில் நடைபெறவிருக்கும் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நீண்ட காலமாக சேதமடைந்திருக்கின்ற குறிஞ்சாக்கேணி பாலத்தை, பிற்பகல் 03 மணிக்குப் பார்வையிடவுள்ளார்.
அதன்பின்னர், பிற்பகல் 4 மணிக்கு, கிண்ணியா, ரீ.பி. ஜாயா வித்தியாலய 25ஆவது வருட பூர்த்தியையொட்டி நடைபெறவிருக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று கட்டடங்களைத் திறந்து வைக்கவுள்ளார்.
13 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago