Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 27 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தியில், நிர்வாகம் பலவிதமான குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குற்றஞ்சாட்டினார்.
கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (26) நடைபெற்றது.
விவசாயத் திணைக்களத்தின் செயலாளர் கே.சிவனாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட 12 கால்நடை அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நியமனங்களை, ஆளுநர் வழங்கி வைத்தார்.
அங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி விடயத்தில், நடைமுறையிலுள்ள பல பிரச்சினைகள் அதிகாரிகளால் தீர்க்கப்படக் கூடியவையெனச் சுட்டிக்காட்டியதுடன், மக்களது வரிப்பணத்தில் சம்பளமும் ஓய்வூதியத்தையும் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்கள், மக்களுக்காகவே தமது சேவைகளையும் சிந்தனைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
2 hours ago
3 hours ago