Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான முதலாவது குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டால் நேற்று (29) முன்வைக்கப்பட்டு, சபையால் அங்கிகரிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணசபையின் 82ஆவது அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நேற்றுக் கூடிய போது, குறைநிரப்பு பிரேரணையை, அவர் முன்வைத்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,
“புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கான தொகை வெளிநாட்டுப் பயணப்படி கொடுப்பனவு மற்றும் செயற்பாடு மாற்றம் காரணமாக மாற்றம் செய்யப்பட்ட பிரமான அடிப்படையிலான கொடை மாகாணசபை உறுப்பினர்களுக்கான மேலதிக நிதி 37 மில்லியன் வழங்கப்படுகிறது.
“பற்றுச்சீட்டு மேலதிகக் கொடுப்பனவுகளாக இத்தேவைகளுக்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியுடன் 1,888 மில்லியனே ஒரு இலட்சத்தி மூவாயிரத்தி அறுநூறு ரூபாய் தேவையான உள்ளது” என்றார்.
இதை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது.
இதேவேளை, காலை 9.30 மணிக்கு கூடிய சபை அமர்வு, 10.30க்கு தேனீர் இடைவேளைக்கு ஒத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சபைக்கு உறுப்பினர்கள் சமுகமளிக்காத காரணத்தால் 12 மணிக்கு தவிசாளர் தலைமையில் கூடிய போது கோரமின்மை காரணமாக மீண்டும் 2.30 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
23 minute ago
27 minute ago