Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஒக்டோபர் 25 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண பொருளாதாரத்தில் விவசாயத்துறை முதுகெழும்பாகவும் கிராமிய மக்களின் பிரதான வாழ்வாதாரமாகவும் திகழ்வதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
திருகோணமலை உற்துறைமுக வீதியிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (24) பிற்பகல் நடைபெற்ற தேசிய உணவு உற்பத்திப் புரட்சி தொடர்பான ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உணவுப் பாதுகாப்பு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, உற்பத்தி குறைவு, காலநிலை மாற்றம் போன்றன பெரும் சவால்களாக உள்ளன.
“கிழக்கு மாகாணத்தில் விவசாயத்துறையானது 30 சதவீதமானோருக்கு நேரடி தொழில் வாய்ப்பை வழங்கும் துறையாக இருப்பது மாத்திரமில்லாமல் 65 சதவீதமானோருக்கு வருமானத்தை வழங்கும் பிரதான தொழிற்றுறையாகவும் விளங்குகின்றது.
“அத்துடன், இந்த நாட்டின் அரிசி உற்பத்தியில் 25 சதவீதத்தையும் பால் உற்பத்தியில் 17 சதவீதத்தையும் மீன் உற்பத்தியில் 23 சதவீதத்தையும் உற்பத்தி செய்வதற்கு பங்களிக்கும் மாகாணமாக கிழக்கு மாகாணம் விளங்குகின்றது.
“இதேவேளை, கிழக்கு மாகாண விவசாயத்துறை மேம்பாட்டை கருத்திற்கொண்டு ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பிரதேசத்தில் விவசாய சேவைக்கால பயிற்சி நிலையம் மற்றும் வெல்லாவெளியில் மீன்குஞ்சு பொரிப்பகமும் நிர்மாணிக்கப்பட்டிருப்பதுடன், அம்பாறை மாவட்ட காஞ்சிரங்குடாவில் பால் பொருள் பதனிடும் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago