2025 மே 01, வியாழக்கிழமை

குச்சவெளியில் ஆணின் சடலம் மீட்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி பகுதியில்,  தலையில் இரண்டு வெட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம், இன்று (15)  மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம், கும்புறுப்பிட்டி - ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் சதீஸ்கரன் (35 வயது) என, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை, திருகோணமலை பதில் நீதவான் எம்.பீ.அன்பார் நேரில் சென்று பார்வையிட்ட போது, தமது மகன் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், கசிப்பு விற்பனையில்  ஈடுபட்டு வருபவர்களால் தனக்குப் பாதிப்புகள் ஏற்படுமெனத் தன்னிடம் கூறியதாக, உயிரிழந்தவரின் தாய் நீதவானிடம் தெரிவித்தார்.

அதேவேளை, சடலத்தை சட்ட வைத்தியப் பரிசோதனைக்குட்படுத்துமாறும், சாட்சியாளர்களையும், சட்ட வைத்திய பரிசோதனை அறிக்கையையும் நவம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்யுமாறும் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை நிறைவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .