2025 மே 14, புதன்கிழமை

குடும்பஸ்தருக்கு மறியல்

Editorial   / 2017 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை - ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை, துஸ்பிரயோகத்துக்குட்படுத்த முற்பட்ட  நபர் ஒருவரை எதிர்வரும்  4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று (26) உத்தரவிட்டார்.                

கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                           

குறித்த சந்தேகநபர், வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை வீட்டுக்குச் சென்று துஸ்பிரயோகத்துக்குட்படுத்த முற்பட்டதாக,  சிறுமியின் பெற்றோரால் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, அவரை நேற்று (25) கைதுசெய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.       

சந்தேக நபரின் மனைவி வெளிநாடு சென்று சென்றுள்ளதாகவும், சந்தேக நபர் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்ததாகவும் வழசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X