தீஷான் அஹமட் / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கட்டைபறிச்சானில் குடும்பநல உத்தியோகத்தராகக் கடமையாற்றி வரும் கிருபைராசா கிறிஸ்டின் பிரவீனா, தாய் - சேய் குடும்ப நலப் பராமரிப்பை சிறப்பாகச் செய்தமைக்காக, கிழக்கு மாகாணத்தில் முதலாமிடம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள சகல தாய் - சேய் பராமரிப்பு பிரிவுகளுக்கும் சென்ற வைத்தியக் குழுவினர் வழங்கிய புள்ளிகளுக்கு அமைவாகவே, இவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
இவரது பிரிவில், நிறை குறைவான பிள்ளைகளின் பிறப்பு வீதம் குறைவு என்பதோடு, இதற்கு அவர், கற்பணித் தாய்மார்களுக்கு வழங்குகின்ற ஆலோசனைகளும் வழிகாட்டல்களுமே காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

24 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago