2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குப்பைகளை வீசியோருக்கு அபராதம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை நகர வீதிகளில் குப்பைகளை வீசிய குற்றச்சாட்டில், தலைமையக பொலிஸ் சுற்றாடல் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 14 பேருக்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து, திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச் எம். ஹம்ஸா, இன்று (04) உத்தரவிட்டார்.

 

பாலையூற்று, இலிங்கநகர், அநுராதபுரச் சந்தி மற்றும் உவர்மலை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே, இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டெங்கு நுளம்புகள் பரவும் விதத்தில் சுற்றுச்சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 பேருக்கு, தலா 1,500  ரூபாய் அபராதம் செலுத்துமாறும், நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X