2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குறைந்த விலைகளில் மரக்கறிகள் விநியோகம்

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு தற்போது நாட்டில் நிலவுகின்ற அசாதாரண நிலை காரணமாக, அம்மக்களுக்கு குறைந்த விலைகளில் மரக்கறிகளை விநியோகம் செய்வதற்காக திருகோணமலை நகர சபை,  திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம், சிவில் அமைப்புகள் ஆகியன இணைந்து 03ஆம் கட்டமாக நேற்று (15) வீடுகளுக்குச் சென்று வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

இதனால் மக்கள் மரக்கறி கொள்வனவில் ஈடுபட்டனர்.

இத்திட்டம், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் சன நெருசலைத் தடுப்பதே பிரதான நோக்கமாகும் என நகர சபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .