Editorial / 2018 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் வரட்சி காரணமாக அதிகளவில் குளங்கள் வற்றிப்போயுள்ள நிலையில், மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் தாம் பெரும் பொருளாதாரச் சிக்கலுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீனவர்களின் குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்குக் கஷ்டப்படுவதாகவும் மாவட்டத்தில் அதிகளவான பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
குளங்களை நம்பி வாழ்ந்து வரும் மீனவக் குடும்பங்களுக்கு வரட்சியான காலப் பகுதியில் நிவாரணம் வழங்குவதற்குரிய ஒழுங்குகளை, பிரதேச செயலகங்களும், மாவட்ட செயலாளர் அலுவலகமும் முன்னெடுக்க வேண்டுமெனவும் மீனவக் குடும்பங்கள் கோரிக்கை விடுக்கின்றன.
அத்துடன், அரசாங்கத்தால் அரச அதிகாரிகளுக்குப் பல காப்புறுதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டி வருகின்ற போதிலும், மீனவக் குடும்பங்களுக்கு எவ்விதக் காப்புறுதித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, மீனவர்களுக்கும் சலுகைகள் அடிப்படையிலான திட்டங்களை முன்னெடுப்பதுடன், நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago