அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றத்மலை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 12 பேரில் 03 பேர், ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் இன்று (18) காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ஏ.சி.றிஸ்வானா (30 வயது) எம்.எச்.அகிலா (40 வயது) எனவும் 03 வயது குழந்தையொன்றும் அடங்குகிறது எனவும் தெரியவருகிறது.
வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், பொது இடங்களைச் சுத்தப்படுத்தும் திட்டத்தின் கீழ், இன்றைய தினம் சிரமதானப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, செடியில் குளவிக்கூடு இருந்ததைக் கவனிக்காமல் செடியை வெட்டிய போது, குளவிக் கூடு கலைந்ததாகத் தெரியவருகிறது.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, 9 பேர் வீடு திரும்பியதாகவும் அப்பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.தாஸீம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .