2025 மே 14, புதன்கிழமை

குளவிக் கொட்டுக்கு நால்வர் இலக்கு

எப். முபாரக்   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் குளத்துக்கு அருகாமையில் உணவு சமைத்து உண்பதற்காகச் சென்ற நால்வர், குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் நேற்று பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய், முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த பஸ்மினா (வயது 38), எஸ்.சப்ரின் பாணு (வயது 28), ஏ.எம்.சப்ரீஸ் (வயது 21), மிலாஸ் கான் (வயது 12) ஆகிய நால்வருமே, குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கந்தளாய் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த மேற்படி குடும்பத்தினர், கந்தளாய் குளத்தை அண்டிய மர நிழல் கொண்ட பகுதிக்குச் சென்று சமைப்பதற்கு ஆயத்தமாகி விறகுக்காக தடியொன்றை அகற்றிய போதே, குளவிக் கூடொன்று கலைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X