Editorial / 2019 மே 31 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-விகாரகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (31) மாலை 4 மணியளவில், வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப்பகுதிக்குள் விறகு வெட்டுவதற்காக சென்றபோது வீழ்ந்து கிடந்த மரத்தை வெட்டியதாகவும், இதன்போது, அங்கு குளவிக்கூடு இருந்ததை அவதானிக்காத நிலையில் குளவி கூடு கலைந்து கொட்டியதாகவும் தெரியவருகின்றது.
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் திருகோணமலை - விகாரகம பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மூன்று பிள்ளைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஐவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
12 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago