எப். முபாரக் / 2017 ஜூலை 27 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 52 கிலோகிராம் ‘குளு’ மாட்டிறைச்சியை, முச்சக்கரவண்டியொன்றில் கொண்டு சென்ற நபரை, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.
முதலாம் வாட்டு, வேலூர், நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், திருகோணமலை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வழங்குவதற்காக நிலாவெளியிருந்து, இவ்விறைச்சியைக் கொண்டு சென்ற போது, சாம்பல் தீவு பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து செவ்வாய்கிழமை (25) மாலை கைதுசெய்யப்பட்டாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பயன்படுத்திய முச்சக்கரவண்டி, பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 Mar 2026