எப். முபாரக் / 2017 ஜூன் 17 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், பெண்கள் இருவர் உட்பட ஐந்து பேரை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்று (16) உத்தரவிட்டார்.
கந்தளாய், வென்ராசன்புர மற்றும் 91ஆம் கட்டைப் பகுதிகளைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கந்தளாய், போகா சந்திப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலின் போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலே, குறித்த சந்தேகநபர்கள் ஐவரையும், நேற்று முன்தினம் (15) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
3 hours ago