Editorial / 2020 மே 04 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலையில், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால், சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்துக்கென அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை என, கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கம், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இந்த முறைப்பாட்டை, திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில், மேற்படி அமைப்பின் தலைவி நாகேந்திரன் ஆசா, இன்று (04) பதிவு செய்துள்ளார்.
தங்களது போராட்டத்துக்கென அமைக்கப்பட்ட குறித்த கூடாரத்தை, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தின் போது அகற்றியிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் இதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மிக விரைவில் எடுத்துத் தர வேண்டும் எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .