ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஜூன் 17 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியாவிலிருந்து திருகோணமலைக்கு கேரளா கஞ்சா கொண்டு சென்ற இருவரை, நேற்றிரவு (16) இரவு 11 மணியளவில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 37 மற்றும் 42 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் 2 கிலோவும் 150 கிராமுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தங்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்படி கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர்களைக் கைதுசெய்ததாக, போதைப்பொருள் பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி ஜனேஸன் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள், திருகோணமலை தலைமையக
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், அவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
24 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
3 hours ago