2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரிலிருந்து தம்பலகாமம் பிரதேசத்துக்கு முச்சக்கர வண்டியில் 6 கிலோகிராம் கேரளக் கஞ்சாவைக் கடத்திச்சென்ற இருவர், இன்று (17) அதிகாலை 4.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தம்பலகாமம், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கனபதிப்பிள்ளை துறை ராஷன் (40 வயது), பாலம்போட்டாறு, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணா என்றழைக்கப்படும் தமிழ்ச் செல்வம் (21 வயது) எனத் தெரியவருகின்றது.

மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி யூ.எஸ்.டெனீப்பின் அறிவுறுத்தலுக்கமைய, ரொட்டவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.ஜெயவர்தன தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட  வீதி சோதனையின் போது, திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் ரொட்டவெவ பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் 5 மணி வரை மேற்கொண்ட இந்த விசேட வீதி சோதனையின் போது, முச்சக்கர வண்டிக்குள் இருந்து 3 கேரளக் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டனவென, மொறவெவ  பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X