அப்துல்சலாம் யாசீம் / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளா கஞ்சாவை, முற்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற சந்தேக நபரொருவரை உப்புவெளி பொலிஸார், நேற்று முன்தினம் (26) கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், ரொட்டவெவ -மிரிஸ்வெவ பகுதியைச்சேர்ந்த சித்தீக் என்றழைக்கப்படும் சலாஹூதீன் முகம்மது ஹனீபா (51வயது) என்ற நபரையே கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இவர் பல மாதங்களாக நேரங்களை மாற்றியும், வீதிகளை மாற்றியும் கேரளா கஞ்சா வியாபாரத்தில் முகவராக செயற்பட்டு வந்துள்ளார்.
இதன்போது இவரிடமிருந்து 266 கிராம் கேரளா கஞ்சாவும், EP AAB-4037 எனும் இலக்க முற்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .