2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கேரளா கஞ்சா வைத்திருந்தவருக்கு பிணை

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் நூறு கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவருக்கு, இருவரின் கையொப்பத்துடன் கூடிய சரீரப்பிணையில் செல்லுமாறு, திருகோணமலை நீதிமன்ற  நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று(8) உத்தரவிட்டார்.                

குறித்த சந்தேகநபர் கிண்ணியா, மஹ்ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த, 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புல்மோட்டை கடற்கரையோரத்திலுள்ள மீன் வாடிப் பகுதியில், நூறு கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நிலையில், இவர் சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தியப்போது, நீதவான் பிணை வழங்கி உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .