Editorial / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
திருகோணமலைக்கு உட்பட்ட வெவ்வேறு பகுதிகளிலிருந்து, கேரள கஞ்சா மற்றும் கஞ்சாவுடன் மூவரை, பொலிஸார், இன்று (10) கைதுசெய்துள்ளனர்.
திருகோணமலை -யாழ்ப்பாணம் பிரதான வீதி, 10ஆம் கட்டை பகுதியில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை, உப்புவெளி பொலிஸார், நேற்று இரவு (09) கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து, 3 கிலோகிராம் 500 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், தலையடி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தலைமன்னாரில் வசித்து வருபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, திருகோணமலை, அக்போபுர பிரதேசத்தில், ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் இருவரை, இன்று அதிகாலை(10) கைதுசெய்துள்ளதாக அக்போபுர பொலிஸர் தெரிவித்தனர்.
சேருநுவர மற்றும் வான்எல ஆகியப் பகுதியைச் சேர்ந்த 28, 41 வயதுடைய இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
3 hours ago