ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தபால் வீதியில் கேரளா கஞ்சாவும், புகையிலைத் தூளும் கலந்த போதைத் தூளுடன், மூதூரிலிருந்து வருகை தந்த இளம் குடும்பஸ்தார் ஒருவர், திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் இன்று (15) மாலை கைது செய்யப்பட்டார்.
இந்தச் சந்தேகநபரை, மேலதிக விசாரணைக்காக திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஸன் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலைப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .