2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கைதிகளை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க விசேட நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்   

திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை, கொரொனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு. விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான கலந்துரையாடல், இலங்கை செஞ்சிலுவை சங்கம், சிறைச்சாலை அதிகாரிகளுக்கிடையில், திருகோணமலை சிறைச்சாலையில், நேற்று(31) நடைபெற்றது.

சிறைச்சாலையின் அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வா தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், செஞ்சிலுவை சங்கத்தின் வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.பற்றிக், உதவியாளர் போல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கைதிகளை, கொரொனா வைரஸ் தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது, எவ்வாறான சுகாதார வழிகளை ஏற்படுத்துவது, கிருமி தெளிப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

சிறைச்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக, செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள், அத்தியட்சகரிடம் கேட்டறிந்தார்கள்.

இதன்போது திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை, கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான பொருள்களும் அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் பிரதான ஜெயிலர், களஞ்சிய காப்பாளர், புனர்வாழ்வு அதிகாரி, மருந்தாளர் போன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X