2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’கொடுப்பனவுகள் கிரமமான முறையில் வழங்கப்படுகின்றன’

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட், எம்.றனீஸ்

கொவிட் 19 வைரஸால் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கொடுப்பனவுகள், திருகோணமலை மாவட்டத்தில் கிரமமான முறையில் வழங்கப்பட்டு வருவதாக, மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

இம்மாதம் 14ஆம் திகதி வரை மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் 62,917 குடும்பங்களில் 57,204 பேருக்கும், சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலிலுள்ள 23,302 பேருள் 21,278 பேருக்கும் 5,000 கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அத்துடன், முதியோர் கொடுப்பனவு பெறும்,  காத்திருப்போர் பட்டியலிலுள்ள 9,976 பேரில் 8,246 பேருக்கும் விசேட தேவையுடையோர், காத்திருப்போர் பட்டியலிலுள்ள 3,454 பேருள் 2,884 பேருக்கும் சிறுநீரக நோயாளிகள் 1,284 பேருள் 1,161 பேருக்கும் 5,000 என்றடிப்படையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .