Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியாவில் அண்மைக் காலமாக இரவு நேரங்களில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களை உடனடியாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில காலகேவுக்கு, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பணிப்புரை விடுத்தார்.
பிரதியமைச்சரின் கிண்ணியா அலுவலகத்துக்கு நேற்றிரவு (17) பொலிஸ் பொறுப்பதிகாரியை அழைத்து, விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே, அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.
கடந்த ஐந்து நாள்களாகத் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் மூன்று வருடங்களுக்கு முன்னர் கிறீஸ் மனிதர்களின் மர்மப் பிரச்சினைகளும் இவ்வாறே உருவெடுத்திருந்ததாகவும், பிரதியமைச்சர், பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் எடுத்துரைத்தார்.
எனவே, பொலிஸ் பாதுகாப்புச் சேவையை, நடமாடும் நிலையில் அதிகரித்து, கிண்ணியா மக்களிடையே நிலவும் பீதியைப் போக்குமாறும் பிரதியமைச்சர் கேட்டுக்கொண்டார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago