Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, புல்மோட்டைக் கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்குச் சென்ற இரண்டு குழுக்களுக்கிடையிலான கைகலப்பில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை இரவு (29) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்குழுக்களுக்கிடையில் நிலவிய வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதன்போது புல்மோட்டை ர{ஹமானிய்யா நகரைச் சேர்ந்த அச்சுல் அக்பர் லாபீர் (வயது 37) மற்றும் ஜே.ஏ.சரித் இஸங்க (வயது 37) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் புல்மோட்டை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026