2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கைக்குண்டுடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 நவம்பர் 06 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை இலிங்க நகர் பகுதியில், பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை, சனிக்கிழமை (05) இரவு 11 மணியளவில் கைதுசெய்து விசாரணை செய்த போது, அவரது வீட்டிலிருந்து கைக்குண்டொன்றை மீட்டுள்ளதாகவும்  திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் கிஷாந்தன் (28 வயது) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குறித்தநபருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரைக் கைது செய்து விசாரித்த போதே அவரது வீட்டிலிருந்து, கே.400 ரக கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும்  தெரியவருகிறது.

குறித்த நபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .