Thipaan / 2016 ஜூன் 30 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, கடனடிப்படையில் காசோலைப் பத்திரம் வழங்கும் நிகழ்வு, நாளை வெள்ளிக்கிழமை (01) காலை 9.30 மணிக்கு, வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளதாக, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் என்.திருக்குமார் தெரிவித்தார்.
திருகோணமலை, உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 650 பேருக்கு காசோலை வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்காக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அக்கடிதத்தை கொண்டு வருமாறும் மாவட்ட முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
25 minute ago
38 minute ago
47 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
38 minute ago
47 minute ago
54 minute ago