Thipaan / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள், நான்கு வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்காட்டு யானைகளின் அட்டகாசம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், யானைகளுக்காக இடப்பட்டிருந்த மின்சார வேலிகளையும் உடைத்தெறிந்து விட்டு, யானைகள், ஊருக்குள் புகுந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
சேத விவரங்கள் தொடர்பான விசாரணைகளை, அக்போபுர பொலிஸாரும் வன இலாகா அதிகாரிகளும் நேரில் சென்று மேற்கொண்டுள்ளனர்.

5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago