2025 மே 19, திங்கட்கிழமை

குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க நடவடிக்கை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை மொறவெவ பிரதேசத்திலுள்ள இரண்டு வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்ற குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மொறவெவ பிரதேச செயலாளர் பாத்திய விஜந்த தெரிவித்தார்.

மஹதிவுல்வெவ கிராம வைத்தியசாலை மற்றும் மொறவெவ ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம் ஆகியவற்றில் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் காணப்படாமையினால் நோயாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பொது உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

அதனையடுத்து, நோயாளர்களின் விடயத்தில் அக்கறையுடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்த பிரதிமைச்சர், தனது நிதியிலிருந்து நிதியொதுக்கீடு செய்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இவ்வைத்தியசாலைகளுக்கும் அடுத்த இரு வாரங்களுக்குள் நீர்ச் சுத்திகரிப்பு உபகரணங்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X