Niroshini / 2016 ஜனவரி 27 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
உடற் பயிற்சி வாரத்தை முன்னிட்டு, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைத் திணைக்களத்தின் அணுசரனையுடன் கிண்ணியாவில் இன்று புதன்கிழமை நடைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
கிண்ணியா பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் ராஜ் மோகன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், மாகாண மற்றும் சிறப்பு அதிதியாக சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் முருகானந்தன் உட் பட பலர் கலந்து கொணண்டனர்.
கிண்ணியா பாலம் அருகில் ஆரம்பமான இந்த நடைப் பயிற்சி, பெரிய கிண்ணியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை சென்றது.
இந் நிகழ்வில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

10 minute ago
19 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
31 minute ago
1 hours ago