Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல் இர்பான் மகா வித்தியாலய வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து தொல்பொருட்கள் சிலவற்றை திங்கட்கிழமை (3) மாலை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
3 அடி நீளமான வாள் ஒன்றும் தலா 2.5 கிலோகிராம் நிறையுடைய 2 புத்தர் சிலைகளும் 2.4 கிலோகிராம் நிறையுடைய ஒரு யானை உருவமும் கன்றுகளுடன் 2 பசுக்களின் உருவங்களுமே மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தங்களுக்குக் கிடைத்த தகவலை அடுத்து, மேற்படி வித்தியாலயத்துக்குச் சென்று கிணற்றில் தேடுதல் நடத்தியபோது, மேற்படி தொல்பொருட்கள் கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என துர்நடத்தை பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.
பகுப்பாய்வுக்காக இத்தொல்பொருட்கள் கிண்ணியாப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பான விசாரணையைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago