Niroshini / 2017 பெப்ரவரி 12 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்
திருகோணமலை, மூதூர் கடலுக்கு, கடந்த 09ஆம் திகதி மீன் பிடிக்கச்சென்று காணாமல் போன மீனவர், இன்று(12) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் 01 - பஹ்ரியா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான லத்தீப் பஸ்ரின் என்ற 28 வயதுடைய மீனவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரைத் தேடும் பணியில் கிராமமக்களும் கடற்படையினரும் இணைந்து செயற்பட்ட நிலையிலேயே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஜனாசா, அக்கறைச்சேனை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago