Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 31 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, அன்புவழிபுரம் பொது மயானத்தில், அமைக்கப்பட்டுள்ள கிரியை மண்டபத்தை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
அன்புவழிபுரம் சிவில் சமூக அமைப்பினால், சுமார் 550,000 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டடத்துக்;கான நிதி, இக்கிராம பொது மக்களிடமும் நலன் விரும்பிகளிடம் இருந்தும் சேகரிக்கப்பட்டதாகும்.
இந்நிகழ்வுக்கு, அன்புவழிபுரம் சிவில் சமூக அமைப்பின் இணைப்பாளர் டொக்டர் ஆர்.ரொகான்குமார் தலைமை தாங்கியதுடன் கிராம சேவகர் சிவானந்தம் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் முரளிதரன் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் குணராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .